வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.
இதேபோல, திருவனந்தபுரம் ரயில் நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.