தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைச்சர்களின் பதவி நீக்கத்தைப் பார்ப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் அரங்கேறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஊழலின் மொத்த உருவமான செந்தில் பாலாஜி மற்றும் பெண்களை இழிவுபடுத்திய பொன்முடியை வேறு வழியின்றி அமைச்சர் பதவியில் இருந்து திமுக அரசு நீக்கம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அதில் ஊழலும், தரம் தாழ்ந்த செயல்பாடுகளும்தான் நிரப்பி உள்ளதாகக் கூறியுள்ள அவர், தமிழக மக்களின் எதிர்ப்புக் குரலால், திமுகவின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக அரசியலில் இருந்து திமுக அரசு அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே அமைச்சர்களின் பதவி நீக்கத்தைப் பார்ப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.