அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் நிலவியது.
நீதிமன்ற கெடுபிடி காரணமாகச் செந்தில் பாலாஜியும், பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து இழிவாகப் பேசியதால் பொன்முடியும் அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே திருவெண்ணைநல்லூரில் திமுக பேரூராட்சி உறுப்பினர் பாக்கியராஜ் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல, அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து எடையார் பகுதியைச் சேர்ந்த குணா என்பவர் தனது இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றித் தீயிட்டு எரித்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.