சுபம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார்.
இதுவரை நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். அதன்படி, சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் கீழ் சுபம் என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இப்படம் மே 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.