மதுரை மாவட்டம், பழைய சுக்காம் பட்டி கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பழைய சுக்காம் பட்டி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக மின் இணைப்பு கோரி மின் வாரியத்தைத் தொடர்பு கொண்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.