கேங்கர்ஸ் படத்தின் 2 நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி – வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது.
இந்த படம் தமிழ்நாட்டில் 300-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், கேங்கர்ஸ் திரைப்படம் இரண்டு நாட்களில் 4 புள்ளி 2 கோடி வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.