கவுதம் கம்பீருக்குக் கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்குக் கடந்த 22ம் தேதி இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
இது தொடர்பாக அவர் டெல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கவுதம் கம்பீருக்குக் கொலை மிரட்டல் விடுத்த குஜராத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான ஜிக்னேஷ்சிங் பர்மரை கைது செய்தனர்.