ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றத்துடன் நுரை பொங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை உள்ளது.
கர்நாடகாவில் கனமழையின்போது குடியிருப்பு மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றத்துடன் நுரைபொங்கி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆற்று நீரைச் சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.