கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே முன் விரோதம் காரணமாக வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
களியக்காவிளை அருகேயுள்ள பனங்காலையை சேர்ந்தவர்கள் விபின் ஜெஸ்லின் கிரேஸ் தம்பதி. இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஆல்வின் ஜோஸ் இரவு நேரத்தில், விபினின் வீட்டிற்கு சென்று கேட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டின் மீது கற்களையும் வீசி எறிந்துள்ளார்.
இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது தீ வைத்துத் தாக்கியது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.