பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும், பயங்கரவாத செயலை ஊக்குவிக்கும் பாகிஸ்தான் அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.