லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ, மும்பை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த லக்னோ அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.