டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.