பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கெளரவித்தார்.
சமூக சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் விதமாக பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ஆம் தேதி அறிவித்தது.
அதில், நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, சமையல் கலைஞர் தாமு உள்ளிட்ட 139 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து கலைத் துறையில் சாதித்ததை கெளரவிக்கும் வகையில் நடிகர் அஜித்குமார், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷன் விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவித்தார்.
தொடர்ந்து விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின், சமையல் கலைஞர் செப் தாமுவிற்கு பத்மஸ்ரீ விருதினை குடியரசு தலைவர் வழங்கினார்.
‘தினமலர்’ நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர். லட்சுமிபதிக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கி, ஜனாதிபதி திரவுபதி முர்மு கவுரவித்தார்.