மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜின் பதவியேற்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மீண்டும் அமைச்சரான மனோ தங்கராஜுக்கு, பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.