டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார்.
பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடி, பாஜகவின் மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதித்துறை அமைச்சகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
சென்னையில் பாஜக மூத்த தலைவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில், இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. தமிழகத்தின் நலன் மற்றும் கட்சியின் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
இதேபோல் மத்திய அமைச்சர் எல்.முருகனையும் நயினார் நாகேந்திரன் சந்திதது பேசினார்.