கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் உணவக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது உணவகம் ஒன்றின் பெயர் மற்றும் விளம்பர பலகையும் அகற்றப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த உணவக ஊழியர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.