கனடாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், லிபரல் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.
கனடாவில் பொது தேர்தல் அறிவிப்புக்குப் பின் கடந்த மாதம் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. பின்னர் பொதுத் தேர்தலில் 3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்திய நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சீட்டூ முறையில் நடந்த இந்த வாக்குப்பதிவை எண்ணும் பணியில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.பலத்த பாதுகாப்புடனும், கண்காணிப்பு கேமராக்களுடனும் வாக்கு எண்ணும் மையங்களில் அதிகாரிகள் வாக்குகளை எண்ணி வருகின்றனர். இதில் 32 இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது,
அதில் முன்னதாக ஆட்சி செய்த மார்க் கார்னியின் லிபரல் கட்சி 11 இடங்களிலும், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 5 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. கனடாவில், கலைக்கப்பட்ட பார்லிமென்டில் ஆளும் கட்சியான லிப்ரல் கட்சி சார்பில் 153 உறுப்பினர்களும், எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையில் 120 உறுப்பினர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.