கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தனியார் நிதி நிறுவன ஊழயிர்கள் இரும்பு கம்பியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் தவணை முறையில் செல்போன் வாங்கியுள்ளார். இரண்டு தவணைகளை சரியாக செலுத்திய நிலையில், அதன் பிறகு பணம் செலுத்த தவறியுள்ளார்.
இதனையடுத்து மணி வீட்டிற்கு சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பணம் செலுத்த வற்புறுத்தி உள்ளனர். பின்னர் மணியை இரும்பு கம்பியர்ல் அவர்கள் தாக்கியுள்ளனர்,. இதில் காயமடைந்த மணி போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.