இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இறுதி விசாரணையை தொடங்கியது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. அதன்படி விசாரணையை தொடங்கிய தலைமை தேர்தல் ஆணையம், இதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்பியுமான சி.வி.சண்முகம், ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, ஓ.பி.ரவீந்திரநாத், கே.சி.பழனிச்சாமி, சூரியமூர்த்தி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி சி.வி.சண்முகம், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்கள் தரப்பில் இருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை என்றும் அவர் கூறினார்.