நடிகை ஸ்ரீலீலா மூன்றாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார்.
தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான ‘கிஸ்’ திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்குக் கன்னடத்தில் வாய்ப்புகள் குவிந்தன. இவர் ஏற்கனவே இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதை ஸ்ரீலீலா அறிவித்துள்ளார்.