மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படாததால் விவசாயம் பாதிப்படைவதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, நீண்ட நேர மின் துண்டிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் விளை பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும், பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.