கேசரி அத்தியாயம் 2 படம் 10 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
சரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ள படம் கேசரி அத்தியாயம் 2.
இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் சி. சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த 18-ம் தேதி வெளியான இப்படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.