டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு யு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானது. இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில், இப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘யு’ தணிக்கை சான்றிதழை வழங்கியுள்ளது. இது குறித்த பதிவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.