U20 பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் தகுதிச்சுற்றில் இந்தியாவுடன் மோதும் அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
20 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கப் போட்டியை நடத்தும் அணியைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும்.
இந்த நிலையில் தகுதிச் சுற்றுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா டி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தான் நாடுகள் இடம் பிடித்துள்ளன.