தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற சாதாரண மாமன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் முயன்றனர்.
அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து தங்களது வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாகத் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர்.