மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!
Jun 6, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை இம்மக்களின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்ப்போம்.

காஷ்மீரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் தேசத்தின் பக்கமும், மத்திய அரசின் பக்கமும் நிற்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்த குரல். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வேதனையில் பேசும் இவர் சுற்றுலாவை நம்பியிருக்கும் காஷ்மீரி அல்ல…. ஒரு அரசு ஊழியர். இந்தியர்களை நாங்கள் என்றுமே நேசிக்கிறோம். ஆனால், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டு மிருகத்தனமான செயல்களைச் செய்தவர்களுக்கு மதம் என்பதே கிடையாது என்பது தான் அவரின் கண்ணீர் குரல்..

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அமலிலிருந்த கால கட்டத்தில் இதே மக்களைத் தான் தங்களுக்கான பாதுகாப்பு கேடயமாக மாற்றி வைத்திருந்தார்கள் தீவிரவாதிகள். அப்போதெல்லாம், தீவிரவாதிகளை வேட்டையாடச் சென்ற பாதுகாப்புப் படையினருக்கு எதிராகக் கல்வீசித் தாக்குதல் நடத்திய அப்பாவி மக்கள் தான், இன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்காக வீதிக்கு வீதி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மக்களின் மனநிலையில் இந்த மாற்றம் ஏற்படுவதற்கான காரணம், அந்த மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தான் என்று நம்புகின்றனர் நடுநிலையான அரசியல் பார்வையாளர்கள்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டப்பிரிவு 370 என்ற காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போது விமர்சித்தவர்கள் கூட, இன்று அப்பாவி சுற்றுலாப் பயணிகளுக்காகக் கண்ணீர் சிந்தும் காஷ்மீர் மக்களைக் கண்டு மவுனமாகி இருக்கின்றனர்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயர்வு பெற்றது. தீவிரவாதிகள் நடமாட்டத்தை முற்றிலுமாக மத்திய அரசு கட்டுப்படுத்தியதால், அதுவரை வாழ்வாதாரமின்றி தவித்த காஷ்மீர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையால் பொருளாதார ரீதியாக மீண்டெழுந்தனர்.

இதன் காரணமாகத் தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்களை மீண்டும் தங்கள் வசம் இழுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றுள்ளனர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள்.

ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்று தங்கள் கண்டன நடவடிக்கைகளால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். நாங்கள் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்ற குரலுடன், அவர்கள் நடத்திய கண்டனப் பேரணிகளே இதற்குச் சாட்சி.

இது ஒருபுறம் என்றால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்காக, காஷ்மீரில் உள்ள ஆயிரத்து 290 கிராமங்களில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி வயதில் மூத்தவர்கள் அவரை அனைவரும் ஒன்று திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, உயிரிழந்தவர்களுக்காகப் பிரார்த்தனையும் நிகழ்த்தினர்.

எந்த தீமைக்கு உள்ளும் ஒரு நன்மை உண்டு என்ற வரிகளை நியாயப்படுத்துவது போல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பாதிப்பாக அமைந்திருந்தாலும், அதன் பிறகு காஷ்மீர் மக்களிடையே பயங்கரவாதத்திற்கு எதிரான தன்னெழுச்சி, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  இதன்மூலம் காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பதை இம்மக்களின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதே உண்மை.

பஹல்காம் தாக்குதல் நடந்த நாளன்று கூட, காயமடைந்தவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடி அவர்களின் உயிரைக் காக்க உறுதுணையாக இருந்தது காஷ்மீரில் சுற்றுலாவை நம்பியிருக்கும் மக்கள் தான். அந்த விதத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்த காஷ்மீர் மக்கள், இன்று இந்திய மக்களின் பக்கமும், மத்திய அரசிற்குத் துணையாகவும் எழுச்சியுடன் நிற்கின்றனர். இனி வரும் நாட்களில் காஷ்மீரில் பயங்கரவாதம் ஊடுருவ முடியாமல் தடுக்கப் போகும் இரும்புத் திரையும் காஷ்மீர் மக்களே..!

Tags: jammu kashmirபஹல்காம் தாக்குதல்Change of heart: Kashmiri people have joined the national movementகாஷ்மீர் மக்கள்கண்டனப் பேரணி
ShareTweetSendShare
Previous Post

தாம்பரம் மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

பும்ராவின் மனைவி சஞ்சனா ஆதங்கம்!

Related News

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

உலக சுற்றுச்சூழல் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

அண்ணாமலையின் WE THE LEADER அமைப்பு – ஆர்வமுடன் இணையும் தன்னார்வலர்கள்!

ஆளுநர் உரையுடன் வரும்18-ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை!

கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் – உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies