சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜம் என்றும், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பும் எனவும் தெரிவித்தார்.