ஆரஞ்சு, ஊதா நிற தொப்பியைப் பெங்களூரு அணி வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
டெல்லியில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 162 ரன்கள் அடித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிக ரன் குவித்த பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட்டுக்குரிய ஊதா நிற தொப்பியை, ஹேசில்வுட்டும் கைப்பற்றினர்.