திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டுப்பன்றி தாக்கியதில் படுகாயமடைந்த 3 பேருக்கு நிவாரணம் வழங்கக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னவனூர் பகுதியில் காட்டுப்பன்றி தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க நிரந்தர தீர்வு காண வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.