உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த நிலையில், ரஷ்யா முதன்முறையாக உக்ரைன் போரில் வட கொரியா படை வீரர்கள் பங்கேற்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.