டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்வானது நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற பின், மரியாதை நிமித்தமாகப் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.
இருவரும் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும், அதிமுக கூட்டணி விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோரை நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.