ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்றதாகத் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காளஹஸ்தி அருகேயுள்ள வனப்பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கார் மற்றும் லாரியில் வேகமாக வந்த 7 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கிப் பிடித்த அதிகாரிகள் லாரியை சோதனையிட்டபோது செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.