பாகிஸ்தான் மீது இந்தியா பதிலடி தாக்குதலை நடத்த வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கவஜா முஹம்மது ஆசிப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாகப் பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் எனவும், இதன் காரணமாகப் பாகிஸ்தான் ராணுவத்தைத் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்கத் தொடங்கலாம் என்பதால் சில மூலோபாய முடிவுகளை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்திய ராணுவத்தினர் தாக்குதல் மற்றும் ஊடுருவல்களை எந்த நேரத்திலும் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் கவாஜா முஹம்மது ஆசிப் தெரிவித்தார்.