அனைத்து சட்டமசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகச் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் உள்ளிட்டவை அவையில் நடைபெற்றன.
தொடர்ந்து கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினராக நியமிக்கும் சட்டமசோதா, உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் சட்ட மசோதா, கடனை வலுக்கட்டாயமாக வசூலிப்போருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் சட்டமசோதா உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகச் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.