கேரளா மாநிலம், இடுக்கி அருகே உள்ள மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மே தினத்தை முன்னிட்டு மூணாறு அரசு தாவரவியல் பூங்காவில் 10 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்காக, பூங்காவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளும், பைபர் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள அரிக்கொம்பன் யானையின் உருவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல இடங்களில் வண்ண விளக்கு அலங்காரங்களுடன் இசையுடன் கூடிய நீர் அருவி, செல்பி பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கண்ணாடி பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசு தாவரவியல் பூங்கா இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.