அடுத்த தலாய் லாமா யார் என்பது குறித்து ஜூலை மாதத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திபெத் நாட்டின் பவுத்த மத தலைவரான தலாய்லாமா தான் ஆட்சியாளர். ஆனால் சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக, தற்போதைய தலாய் லாமா, சிறுவயதாக இருந்த போதே இந்தியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து விட்டார்.
தற்போது மத தலைவராக இருக்கும் தலாய்லாமாவுக்கு 89 வயதாகிறது. தனக்கு
90 வயதாகும் போது அடுத்த தலாய்லாமா பற்றிய அறிவிப்பை வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.
இந்த சூழலில், இதுகுறித்த அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளியாகுமெனத் தெரிகிறது.