குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சந்தோலா ஏரிக்கு அருகில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரால் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
இதற்காக 50 ஜேசிபிக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.