இந்தியாவின் முதல் புல்லட் ரயில் 2028-ம் ஆண்டுக்குள் இயக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும், ஜப்பானும் இணைந்து மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
இதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 2028-ம் ஆண்டுக்குள் புல்லட் ரயில் இயக்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த புல்லட் ரயிலானது மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.