அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று இன்றுடன் 100 நாள் நிறைவு பெறுகிறது.
டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்றார்.
அன்றிலிருந்து சட்டவிரோத குடியேற்றம், பரஸ்பர வரி விதிப்பு, அரசுப் பணியாளர்கள் வேலை இழப்பு என பல்வேறு அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார்.
மேலும், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், டிரம்ப்பின் அதிரடி முடிவுகளுக்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், அவர் பதவியேற்று இன்றுடன் 100 நாள் நிறைவடைகிறது.