நெல்லையில் உள்ள பிரபல பீடி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நெல்லை டவுண் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
வழக்கம்போல அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில், அங்குச் சென்ற 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் 8 அலைபேசிகளைப் பறிமுதல் செய்தனர்.