இந்திய அரசு விதித்த வர்த்தக தடையின் எதிரொலியால் பாகிஸ்தானில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் உயிர் காக்கும் முக்கிய மருந்துகளையும் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வந்தது.
இந்நிலையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியால் இந்திய அரசு வர்த்தக தடை விதித்தது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் முழுவதும் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.