புதுச்சேரியில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் பாஜக நிர்வாகி உமா சங்கர் என்பவரை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி கர்ணன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், விசாரணையில் முன்விரோதம் காரணமாக உணவு டெலிவரி ஊழியர்கள் போல நோட்டமிட்டு உமா சங்கரை கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் கொலை சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.