இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வரும் 14-ம் தேதி இந்தியாவின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்கவுள்ளார். இதனை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்க்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் வரும் 13-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.