கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சர்ஜாபூர் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்ற இரு இளைஞர்கள், ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச்செல்ல முயன்றபோது சாலையோரம் நின்றுகொண்டிருந்த வேன் மீது மோதி விபத்தில் சிக்கினர்.
படுகாயமடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.