தமிழகம் முழுவதும் மூத்த சிவில் நீதிபதிகள் 117 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் சரிதா, மகேஸ்வரி, சுந்தராஜன், சுதா ராணி, சுரேஷ்குமார், சுதா, கார்ல் மார்க்ஸ் ஆகியோரும் வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, பொள்ளாச்சி, நாகர்கோவில், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த மூத்த சிவில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.