ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு திடீர் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கணக்கில் வராத 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், போகலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.