NTRNeel படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.
‘NTR-31’ படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படம் அடுத்தாண்டு ஜூன் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.