திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மூடப்பட்ட தர்காவை வழிபாட்டிற்காகத் திறக்க வலியுறுத்தி மதகுருமார்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெரிய பேட்டை பகுதியில் உள்ள ஹஸ்ரத் மஸ்தான் அவுலியா தர்காவின் பழைய தலைமை நிர்வாகியான அனீஸ் அகமதை நீக்கிவிட்டு புதிய தலைமை நிர்வாகியைத் தமிழ்நாடு வக்ஃபு வாரியம் நியமித்தது.
இதனால் ஆத்திரமடைந்த அனீஸ் அகமது தர்காவிற்குச் சொந்தமான நிதி ஆவணங்களைத் திருடிவிட்டு, தர்காவையும் பூட்டிவிட்டுத் தலைமறைவானார்.
இந்நிலையில், மூடப்பட்ட தர்காவை மீண்டும் வழிபாட்டிற்குத் திறக்கும்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மத குருமார்கள் கோட்டாட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.