விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஏஓ-வை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாம்பேட்டை பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சிற்றரசு என்பவர் விஏஓ-வாக பணியாற்றி வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட 28வது வார்டு திமுக கவுன்சிலர் சந்திரன் என்பவர், தனக்கு தெரிந்த பெண் ஒருவருக்கு இருப்பிட சான்றிதழ் வழங்கக் கோரி பேசியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட சிற்றரசு, மறுநாள் காலை நீண்ட நேரம் கழித்து அலுவலகத்திற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் சந்திரன், தனது ஆதராவாளர்களுடன் சேர்ந்து விஏஓ மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.