மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மிர்ரா ஆண்ட்ரீவா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைன் வீராங்கனை யூலியா ஸ்டாரோடுப்ட்சேவா உடன் மோதினார்.
6 க்கு 1, 6 க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் மிர்ரா வெற்றி பெற்றார். தொடர்ந்து நாளை நடைபெறும் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோத உள்ளார்.